இன்றைய ராசி பலன் 15/07/2016, மேஷம் – மீனம், உங்கள் ராசி என்ன சொல்லுதுன்னு தெரியுமா?

Loading...

மேஷம்: பிடிவாத குணத்தால், மற்றவர் அதிருப்திக்கு ஆளாகலாம். நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில், மிதமான லாபம் கிடைக்கும். அதிக விலை மதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பதில் கவனம் தேவை.

ரிஷபம்: பேச்சில், இனிமை நிறைந்திருக்கும். எதிரிகள் இடம் மாறிப்போகும் நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில், பணவரவு அதிகரிக்கும். அரசு தொடர்பான உதவி கிடைக்க வாய்ப்புண்டு.

மிதுனம்: நண்பரிடம் பழகி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, அதிக அளவில் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். குடும்ப தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள்.

கடகம்: சிலர் தவறான ஆலோசனை கூறலாம், கவனம். தொழில், வியாபாரத்தில், போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

zodiac_2753679b

சிம்மம்: மற்றவரை நம்பி, எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில், நிலுவைப் பணியை நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பால் பணவரவு சீராகும். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை

கன்னி: நேர்மை எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில், திட்டமிட்ட வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

துலாம்: முக்கிய பணி நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில், வருமானம் சராசரி அளவில் இருக்கும். பிறர் பார்வையில் படும்படி அதிக பணம் செலவழிக்க வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை.

விருச்சிகம்: புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரத்தில், அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில், சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

தனுசு: சிலரது பேச்சு, உங்களை சங்கடப்படுத்தலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக, கூடுதலாக பணிபுரிவது அவசியம். சராசரி அளவில் வருமானம் இருக்கும். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும்.

மகரம்: நல்லவர்களின் ஆலோசனை கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில், அளவான மூலதனம் போதும். அதிக உழைப்பால், வருமானம் காண்பீர்கள். வாகன பாதுகாப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில், பங்குதாரர்களின் ஆதரவால் வளர்ச்சி உண்டாகும். லாபம் பெருகும். வெளியூர் பயணத்தால், இனிய அனுபவம் கிடைக்கும்.

மீனம்: அன்றாடப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். தொழில், வியாபார வளர்ச்சியால், ஆதாயம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, விவகாரங்களில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். விரும்பிய உணவை உண்டு மகிழ்வீர்கள்.Loading...