நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் உடல்நலத்தை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க…

Loading...

கோடை, குளிர், இலையுதிர், வசந்தம் என காலங்கள் இருப்பது நாம் அறிந்தது தான். ஆனால், இதற்கும் நமது உடல்நலத்திற்கும் என சம்மந்தம் இருக்கிறது என நினைக்கிறீர்களா? சந்தேகம் வேண்டாம் நிறையவே சம்மந்தம் இருக்கிறது. நமது முன்னோர்கள் ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகள் ஒன்றாக இருக்க கூடாது என்பார்கள் ஏன் தெரியுமா?

ஏனெனில், ஆடி மதத்தில் கருத்தரிக்க நேரிட்டால், குழந்தை கோடை காலமான ஏப்ரல் – மே மாதத்தில் பிறக்கும்.

400x400_MIMAGE817eece2727c1bced6bb9904a228de80

மற்ற காலங்களில் பிறக்கும் குழந்தைகளைவிட கோடை காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தான் நிறைய உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதுப் போல காலம் சார்ந்து நமது உடல்நலத்தில் உண்டாகும் விளைவுகள் பற்றி நாம் அறிந்துக் கொள்ள முடியும்….

கோடை காலமான ஏப்ரல் மாதத்தில் வெப்பம் அதிகம், சூரியனில் இருந்து வெளிப்படும் வைட்டமின் டி சிசு வளர்ச்சியில் சற்று தாக்கம் ஏற்படுத்துவதே இதற்கான காரணம்.

சர்வதேச விளையாட்டு மருத்துவ நாளேடு நடத்திய ஆய்வில், நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களோடு ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களுக்கு இதய மற்றும் சுவாசத்தில் 10% அதிக வலிமை குறைபாடு தென்படுகிறதாம்.

மேலும், கோடை காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக கிட்டத்து பார்வை குறைபாடு உண்டாகிறது என கண்ணொளியியல் (Ophthalmology) ஆய்வுப் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மற்றும் கோடை காலத்தில் பிறந்தவர்கள் மத்தியில் மனநிலை மாற்றம் குறித்த வேறுபாடுகள் தென்படுகிறதாம். சோகம், மகிழ்ச்சி, கோபம் போன்றவை டக்குன்னு இவர்களுக்கு மாறிவிடுமாம். இதை மூட் ஸ்விங் என்கின்றனர். கோடை காலத்தில் அதிகப்படியான தட்பவெப்ப நிலை நிலவுவது தான் இதற்கான காரணம்.

இதனால் தான நமது முன்னோர்கள் ஆடி மாதத்தில் புதுமண தம்பத்தில் இணைந்து இருக்க வேண்டாம். இந்த மாதத்தில் கருத்தரித்தால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்க நேரிடம், அதனால், அந்த குழந்தைக்கு சுவாசம் மற்றும் இதய செயல்திறன் குறைபாடு ஏற்படலாம், என கூறியிருக்கின்றனர்.

இலையுதிர் காலத்தில் பிறந்தவர்களுக்கு 30-90% வரை உணவு அழற்சி உண்டாக வாய்ப்பிருக்கிறதாம். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில், இலையுதிர் காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சரும மற்றும் உணவு அழற்சி அதிகம் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டது.

ஆஸ்திரியன் – ஜெர்மன் நடத்திய ஆய்வில், குளிர் காலத்தில் பிறக்கும் ஆண்கள் அதிகம் இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள் என கண்டறிந்துள்ளனர். மேலும், குளிர்காலத்தில் பிறந்த ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கிறதாம்.

மே மாதத்தில் 10% அதிகமான அளவு குறைமாத பிரசவம் உண்டாகிறதாம். இதை கடந்த 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், இதற்கு காரணம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியில் (Feb-Mar) இவர்களுக்கு காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சளி காய்ச்சல் தான் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வில், வசந்த காலத்தில் பிறக்கும் பெண்களுக்கு மாதவிடாய் முன்கூட்டியே நின்றுவிடுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்களோடு ஒப்பிடுகையில் இவர்களுக்கு 15 மாதங்கள் முன்னரே மாதவிடாய் நின்றுவிடுகிறதாம்.Loading...