உங்களை பற்றி அறிய உங்களின் கைகளை பாருங்க!!

Loading...

ஒரு மனிதரின் கையின் அளவை வைத்தே அவரின் குணநலன், தனித்தன்மை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அது எப்படி என பார்ப்போம்.

பெரிய கை கொண்டவர்களுக்கும், சிறிய கை கொண்டவர்களுக்கு இது வித்தியாசப்படும். அதனால் முதலில் கட்டை விரலை வைத்து கையின் அளவை முழங்கை வரை அளக்க வேண்டும்.

அதன் படி சிறிய கை உள்ளவர்களுக்கு

கை சிறியதாக உள்ளவர்கள் பெரும்பாலும் எல்லா விடயங்களிலும் அதிக ரிஸ்க் எடுப்பார்கள். மேலும் இவர்கள் தாராள மனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வியக்கத்தகு உறவுமுறைகளை எப்போதும் கொண்டிருப்பார்கள்.

மேலும் இவர்கள் நடைமுறைகேற்றவாறு தங்களை மாற்றி கொள்வார்கள். எந்த பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் இவர்கள்.

பெரிய கை உள்ளவர்களுக்கு

இவர்கள் ஒரு விடயத்தை எடுத்தால் அதை கச்சிதமாக செய்து முடிப்பதில் வல்லவர்கள். எல்லா விடயத்திலும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மை கொண்ட இவர்கள் நல்ல உழைப்பாளிகளாகவே திகழ்வார்கள்.

 heart_regai_002-w540

இவர்கள் ஒருவர் மேல் அன்பு வைத்தால் அது இதயத்திலிருந்து வந்ததாகவே இருக்கும், போலித்தனம் இருக்காது.

உள்ளங்கை சதுர வடிவில் இருந்தால்

இப்படி பட்டவர்கள் செய்யும் எல்லா செயலிலும் நிச்சியம் ஒரு லாஜிக் இருக்கும். கணக்கு விடயங்களில் இவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள். மேலும் நடைமுறைக்கு சாத்தியமானவைகளை மட்டுமே இவர்கள் மேற்கொள்வார்கள்.

உள்ளங்கை செவ்வக வடிவில் இருந்தால்

இப்படி பட்டவர்கள் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கான தீர்வை மெதுவாக செய்யாமல் உடனே மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லா விடயங்களிலும் புதுமையை எதிபார்ப்பவர்களாக இருப்பார்கள்.

விரல்கள் நீளமாக இருந்தால்

இவர்கள் எந்த ஒரு விடயத்தை பற்றியும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பெரிய ஆர்வத்துடனே எப்போதும் இருப்பார்கள்.

விரல்கள் குட்டையாக இருந்தால்

இவர்கள் ஆளுமை திறன் கொண்டவர்களாகவும், பெரிய தலைவர்களாகவும் சிறப்புமிக்கவர்களாகவும் இருப்பார்கள்.Loading...